சனி, 21 நவம்பர், 2009 / லேபிள்கள்: ,

பேசாத பிள்ளைகளை பேச வைப்பவர்


கிழக்கிலங்கையிலே பிரசித்தி பெற்ற ஆலயங்களிலே ஒன்றாகத் திகழும் மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையாரின் பெருமைகளைக் சொல்லும் பாடல்களை தருகின்றேன்.

முக்கண்ணனார் புத்திரனே வா விநாயகா
முதற்பொருளே மூத்தவனே  கேள்  விநாயகா
முக்கனி தேன் சக்கரை பால் வா விநாயகா
முத்தமிழால் உனைத் தொழுவோம் கேள் விநாயகா

அறுகம்புல்  மலரென்றவரே வா விநாயகா
அழகாக அமர்ந்திருந்து கேள் விநாயகா
வறுமை பிணி துயர் போக்க வா விநாயகா
பொறுமையுடன் எம் குறையைக் கேள் விநாயகா


சோதி லிங்கமானவரே வா விநாயகா
சுயம்புவென வந்தவரே கேள் விநாயகா
ஆதி சக்தி நாயகரே வா விநாயகா
ஆலமுண்டன் தன மகனே கேள் விநாயகா


களுதாவளைப் பொங்கலுன்ன வா விநாயகா
பிள்ளையாரின் கதை படிப்போம் வா விநாயகா
களுதாவளைத் திர்த்தமாட வா விநாயகா
கனி ரசம் போல்  ஊஞ்சலிசை கேள்  விநாயகா

கருத்துகள் (5) / Read More

திங்கள், 31 ஆகஸ்ட், 2009 / லேபிள்கள்:

விசேஷ அபிசேகங்களின் பலன்கள் மற்றும் விசேஷ திரவிய கோமங்களின் பலன்கள்.

விசேஷ அபிசேகங்களின் பலன்கள்

நெய் - மோஷம்

பால் - நீண்ட ஆயுள்

தயிர் - மகப்பேறு

இளநீர் - உயர் பதவி

தேன் - சரஸ்வதி கடாஷம்

பழரசம் - யம பயநீக்கம்

சந்தணம் - சாயுச்சிய மோஷம்

பஞ்ச கவ்யம் - தூய உள்ளம்

பஞ்சாமிர்தம் - வெற்றி

கருப்பச்சாறு - ஆரோக்கியம்

நல்லெண்ணெய் - சுக வாழ்வு

கலசாபிசேகம் - அஸ்ட லக்ஷ்மி கடாஷம்

விசேஷ திரவிய கோமங்களின் பலன்கள்.

அரசு - செல்வம்

அத்தி - போகம்

வன்னி - வசியம்

வில்வம் - புஷ்டி

இத்தி - ஸ்தம்பனம்

எள்ளு - முத்தி

உளுந்து - பசுவிருத்தி

கருங்காலி - வெற்றி

சர்க்கரை - ஸ்ரீப்பிரதம்

மா - சத்துருஷயம்

ஆல் - ஆரோக்கியம்

பொரிமா - பகைவரின் அழிவு

பயறு - ஆயுள் விருத்தி

நெற்பொரி - செளபாக்கியம்

தேங்காய் - சர்வசித்திகரம்

யவநெல் - ராஜவசியம்

பக்குவான்னம் - தானிய விருத்தி

சந்தனக் கட்டை - சாந்தி

கருத்துகள் (0) / Read More

சனி, 29 ஆகஸ்ட், 2009 /

கேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்.

இந்துக்களின் விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதங்களில் ஒன்றான கேதார கெளரி விரதத்தின் மகிமையினை கூறும் இறுவட்டு ஒன்றினை எமது கலைஞர்களின் பங்களிப்போடு வெளியிட்டு இருந்தேன்.


பாடல்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தன. அப்பாடல்கள் நீங்களும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்


கதைச் சுருக்கம்

திருக்கைலாச மலையிலே பரமசிவன், பார்வதி சமேதராக வீற்றிருந்த வேளையிலே. தேவர்களும், முனிவர்களும் அங்கு சென்று இருவரையும் சுற்றி வந்து வணங்கினர். அந்த வேளையிலே அங்கு வந்த பிரிங்கி முனிவர விகடக் கூத்தொன்றை ஆடி அங்கிருந்தவர்களை மகிழ்ச்சி அடையச் செய்த பின்னர். உமாதேவியை விலக்கி விட்டு சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கினர். உமாதேவியை அலட்சியம் செய்த முனிவரின் உடலிலிருந்த சக்தியை உமாதேவி எடுத்துக் கொண்டதனால் பிரிங்கி முனிவர் சபையிலே சோர்ந்து வீழ்ந்தார்.


சிவபெருமான் பிருங்கி முனிவரிடம் தடி ஒன்றைக் கொடுத்து அதனை ஊன்று கோலாகக் கொண்டு நடந்து செல்வதற்கு அனுக்கிரகம் செய்தார். இதனால் ஆத்திரமும் அவதானமும் அடைந்த உமாதேவி சிவபெருமானிடம் கோபித்துக் கொண்டு பூவுலகுக்கு வந்தார்.


ஒரு வில்வ மரத்தடியில் உமாதேவி வீற்றிருந்தார். உமாதேவியின் வருகையால் அந்த வனம் புதுப்பொலிவு பெற்றது. அந்த வனத்திலே வசித்த கௌதம முனிவர் திடிரென ஏற்பட்ட மாற்றத்துக்கான மாற்றத்துக்கான காரணத்தை அறிய முற்பட்டபோது. உமாதேவியைக் கண்டு நடந்த சங்கதிகளை அறிந்து கொண்டார்.


புரட்டாதி மாதம் சுக்கில பட்ச தசமி தொடக்கி இப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் தீபாவளி அமாவாசை வரையுள்ள கேதரேசுரர் விரத மகிமை பற்றியும் அதனை அனுஷ்டிக்கும் முறைமை பற்றியும் விளக்கமாகக் கூற அம்மை விரதம் நோற்று அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகினார்.
பதிவிறக்கங்கள்...


கதைச் சுருக்கம்.

பாடல் 1

பாடல் 2

பாடல் 3

பாடல் 4

பாடல் 5

கருத்துகள் (0) / Read More

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009 / லேபிள்கள்: ,

கண்ணனை நம்பினால் சொன்னது பலிக்கும்
இந்து சமயம் பரந்து விரிந்த ஒரு கடல். அதிலே நிறையவே எழுதலாம். விரைவிலே பல விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன். காத்திருங்கள்.

கண்ணனை நம்பினால் சொன்னது பலிக்கும் என்று சொல்வார்கள் உண்மையும் அதுதான். கிருஷ்ணருடைய பிறந்த தினத்தினையும் அதன் சிறப்பு அம்சங்களும் நிறைந்த கோகுலாஷ்டமி தினம் பற்றிய பல்வேறு தகவல்களை நண்பி சத்தியா விபரமான முறையிலே ஒரு இடுகையாக தந்திருக்கின்றார். அந்த இடுகையிலே.....

தசாவதாரத்தில் ஓர் அவதாரம் கிருஷ்ணாவதாரம். நமக்கு ஈடினையில்லாத பகவத் கீதையை அருளியவன் கிருஷ்ணபரமாத்மா. அவர் ஜனித்த (பிறந்த)புண்ய தினமே கோகுலாஷ்டமி தினமாகும்.

கலாச்சாரங்களில் பின்னிப் பிணைந்தது நம் பாரதம்! இங்கு நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு பின்னணி உண்டு. இவை ஒவ்வொன்றும் நமக்கு பல உண்மைகளை உணர்த்துவதாக உள்ளன......
கோகுலாஷ்டமி தினமும் அதன் சிறப்பம்சங்களும் பற்றி அறிய http://sashiga.blogspot.com/2009/08/blog-post_3326.html இங்கே செல்லவும்.

கருத்துகள் (8) / Read More

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009 / லேபிள்கள்: , , ,

கடவுள் நேற்று முளைத்த காளானா...

எனது மற்றைய வலைப்பதிவிலே மறைந்துவரும் தமிழர் சம்பிரதாயங்கள். எனும் இடுகையிலே தமிழர் சம் பிரதாயங்கள் தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தேன். அதிலே இந்துக்களின் சமய சம்பிரதாயங்களோடு கூடிய ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தேன்.
அந்த இடுகைக்கு நண்பர் வால்ப்பையன் தனது பின்னூட்டத்திலே பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

வால்பையன் சொன்னது…

தமிழர் சம்பிரதாயத்துக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை!
தமிழ் கல் தோன்றி மண் தோண்றா கால்த்திலிருந்து இருக்கிறது!
கடவுள் நேற்று முளைத்த காளான்!
August 7, 2009 8:06 AM

இவரது இக் கருத்துக்குரிய விளக்கத்தினை தனி ஒரு இடுகையாகத் தருவதாக சொல்லியிருந்தேன்.

எந்த ஒரு இனத்தினையோ, சமுகத்தினையோ எடுத்துக் கொண்டால் அவர்களின் சம்பிரதாயங்கலிலே எதோ ஒரு வகையில் சமயம் என்பது செல்வாக்குச் செலுத்துகின்றது.

தமிழ்மொழி என்பது சிறப்பான ஒரு மொழி. வால்ப்பையன் சொல்வதனைப்போல் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முற்பட்டது தமிழ் மொழி என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்.

இந்து சமயத்தைப் பொறுத்தவரை இந்து சமயம் ஆதியும் அந்தமும் இல்லாத ஒன்று. இவ்வாறு இந்து மதம் ஆதியும், அந்தமும் (தொடக்கமும், முடிவும்) இல்லாத ஒரு மதமாக இருக்கின்றபோது இந்து மதத்திலே இருக்கின்ற கடவுளர்கள் எப்படி நேற்று முளைத்த காளானாவது என்பது எனக்குப் புரியவில்லை. எனக்குப் புரியவேண்டிய அவசியமுமில்லை.

தமிழர்களுக்கென்றே தனித்துவமான பல சம்பிரதாயங்கள் இருக்கின்றன. இன்று அவற்றில் பல சம்பிரதாயங்கள் மறைந்து வந்தாலும் சில சம்பிரதாயங்கள் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த சம்பிரதாயங்களுக்கும் தமிழர்கள் சார்ந்த மதங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றன.

அதிலும் இந்து மதத்தினைப் பின்பற்றுகின்ற தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களின் சம்பிரதாயங்கள் இந்து மதத்தோடு பின்னிப்பிணைந்த ஒன்றாக இருக்கின்றது.

இந்து மதத்திலே இருக்கின்ற சம்பிரதாயங்களுக்கு தகுந்த காரணங்கள் இருக்கின்றன. அதேபோல் அந்தச் சம்பிரதாயங்களிலே அதிக நம்பிக்கையும் கொண்டவர்கள்தான் இந்துக்கள்.

அதே போன்றுதான் ஏனைய மதத்தினைப் பின்பற்றுகின்றவர்களும், தமது கடவுள் மீது அதிக நம்பிக்கையும் வைத்து இருக்கின்றனர். கடவுள் நேற்று முளைத்த காளான் என்று சொல்வது சொல்பவர்களின் அறியாமைதான். கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் கூட இப்படிச் சொல்லமாட்டார்கள். எந்த ஒரு மதமும் தாங்களின் மதம் நேற்றுத்தான் உதயமானது என்று சொல்லவில்லை.

தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் பின்பற்றுகின்ற மதம் சார்ந்ததாகவே அவர்களின் சம்பிரதாயங்களும் அமைந்திருக்கின்றன. எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அவர்களது மதத்தோடு தொடர்புபட்டே அந்தச் சம்பிரதாயங்கள் அமைந்திருக்கின்றன.

தமிழர்களிடையே அதிகம் இடம் பெறுகின்ற நிகழ்வுகளைப் பாருங்கள் அந்த நிகழ்வுகள் அவர்கள் பின்பற்றுகின்ற சமயம் சார்ந்திருப்பதனை காணலாம். உதாரணமாக திருமணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்துக்களின் சம்பிரதாயத்துக்கும் கிறிஸ்தவர்களின் சம்பிரதாயத்துக்கும் எவ்வளவே வேறுபாடு இருக்கின்றது.

இங்கே சமயம் சார்ந்ததாக அந்தச் சம்பிரதாயங்கள் அமையவில்லையா. சமயம் சார்ந்ததாக சம்பிரதாயங்கள் இல்லை என்றால் ஏன் இந்துக்களின் திருமண சம்பிரதாயத்துக்கும் கிறிஸ்தவர்களின் (இங்கு கிறிஸ்தவர்கள் எனும்போது கிறிஸ்தவ மதத்தினை பின்பற்றும் தமிழர்கள்) சம்பிரதாயத்துக்கும் வேறுபாடு இருக்கின்றது. இரண்டு மதத்தவர்களும் தமிழர்கள்தானே. இங்கே மதம் சார்ந்ததுதான் சம்பிரதாயம் என்பது புலப்படுகின்றதல்லவா?

இன்னும் உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். சம்பிரதாயங்கள் தமிழ் மக்களின் சமயங்களோடு பின்னிப்பிணைந்து விட்டது என்பதே உண்மை. இந்துமத கடவுளர்களோ, ஏனைய கடவுளர்களோ நேற்று முளைத்த காளான்கள் இல்லை என்பதும் உண்மையே.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். உங்கள் கேள்விகள் வரும்போது பின்னூட்டத்தில் விளக்கம் தருகிறேன்.

இதற்கு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க விரும்புபவர்கள் இங்கு (http://shanthru.blogspot.com/2009/08/blog-post_11.html) வந்து தெரிவிக்கலாம்.

கருத்துகள் (0) / Read More

திங்கள், 10 ஆகஸ்ட், 2009 / லேபிள்கள்: , , ,

இலங்கைப் பதிவர்கள் சந்தோசத்தில்...


இலங்கைப் பதிவர்களிடையே தப்போது அதிகமாகப் பேசப்படுகின்ற விடயம்தான் இலங்கைப் பதிவர்கள் சந்திப்பு. சந்திப்புக்கான நேரம், இடம், நோக்கங்கள் என்பன தீர்மானிக்கப் பட்டுவிட்டன.

பதிவர் சந்திப்பு இலங்கைப் பதிவர்களுக்கோர் முக்கிய திருப்பு முனையாக அமைய இருக்கின்றன. நீண்ட காலமாக எதிர் பார்க்கப்பட்ட விடயம் தற்போது கை கூடியிருக்கிறது.

காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,
இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்)
கொழும்பு 06.

நோக்கங்கள் :

இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.

புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்

இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.

பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.

பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்

இன்னும் பல‌..

வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.

லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com


முழுமையான நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.

பிற்குறிப்பு : மின்னஞ்சலினூடாக பலரை நாம் தொடர்புகொண்டோம் சிலரின் மின்னஞ்சல் முகவரிகள் எமக்கு கிடைக்கவில்லை ஆகவே தயவு செய்து மின்னஞ்சலில் இதனைப் பற்றிய தகவல்கள் கிடைக்காதவர்கள் எந்தவித தயக்கமின்றி எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

ஏதாவது கருத்துக்கள்,ஆட்சேபணைகள்,ஆலோசனைகள் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.

உங்களுக்கு தெரிந்த வலைப்பதிவாளர்கள், ஆர்வமுள்ளவர்களையும் அழைக்கவும்; உங்கள் வருகை பற்றி உறுதிப் படுத்தவும்.

யாரையும் தவறவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாயுள்ளோம்.. யாராவது ஆரம்பிக்க வேண்டும் என்பதால் தான் நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.. எம்முடன் இணைந்து முன்னெடுக்க ஆர்வமுள்ளோர் வரவேற்கப்படுகிறார்கள்.

இருவாரங்கள் தாராளமாக இருப்பதால் இலங்கை முழுவதும் இருந்து பங்கேற்பை எதிர்பார்க்கிறோம்.

உங்கள் வலைத்தளங்களிலும் இதனைப் பிரசுரித்து வருகைகளை அதிகரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்..

கருத்துகள் (4) / Read More

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009 / லேபிள்கள்: ,

கணபதி துணையோடு புதியதோர் உதயம்...

வணக்கம் நண்பர்களே.....


இந்த வலைப்பதிவினூடாக இந்து சமயத்தை பற்றிய பல்வேறுபட்ட விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். நான் அறிந்த தெரிந்துகொண்ட விடயங்கள் உங்களை வந்து சேர இருக்கின்றது. தொடருங்கள்

கணபதி துணையோடு ஆரம்பிக்கின்றேன்....


பிள்ளையாரை நம்பி வாருங்கள் -
அவர்பிள்ளையாகி மகிழ்ச்சி ஊட்டுவார்
துள்ளிஓடும் எலியில் ஏறுவார் - அவர்
வள்ளலாகி வாரி வழங்குவார்.


கணங்களுக்கு நாதனாக அமர்ந்து இருப்பவர் -
தன்னைவணங்குவோர்க்கு வாழ்க்கையினை வசதி ஆக்குவார்இணங்குவோர்க்கு நலன்கள் நாட்டுவார் - தன்னைபிணங்குவோர்க்கு பிணிகள் காட்டுவார்.


கரத்தை நீட்டி கருணை கேளுங்கள் - ஐந்து
கரத்தை நீட்டி உரத்தை ஊட்டுவார்சிரத்தையோடு
சிரத்தைத தாழ்த்துங்கள் - கேட்கும்
வரத்தை தந்து பரத்தை காட்டுவார்

பெனையாக கொம்பை நாட்டினார் - எம்
ஊனை உருக்கும் திருமுறை எமக்கு
காட்டினார்ஆணையாககாட்டி ஓடினார்கள் -
குற வள்ளிமானை வேலன் கையில் ஊட்டினார்

கருத்துகள் (11) / Read More